பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131 பேருக்கான உணவுப்பொருட்கள் அனுப்பி வைப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திலுள்ள இரணை தீவில் புரேவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு பொருட்கள் இன்று கடற்படையின் உதவியுடன் பூநகரி பிரதேச செயலாளரினால் இரணை தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131 பேருக்கான உடனடி உதவிகளை
கிளிநொச்சி மாவட்டத்தில் தனித் தீவாக காணப்படுகின்ற இரணைதீவு பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும் மற்றும் தொழிலின் நிமித்தம் சென்று தங்கியிருப்போருமாக 88 குடும்பங்களை சேர்ந்த 131பேர் அங்கு இரு வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களது தேவைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான உடனடி அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான கடல்வழி போக்குவரத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில் நிலமை நீடித்ததால் கடற்படையின் உதவியுடன் உடனடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சூழலில் கொவிட் 19 தொற்று தொடர்பிலும் மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.