பிரான்சில்11ஆவது முறையாக ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

பிரான்சில் 11 ஆவது முறையாக ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

பிரான்சில் கடந்த சில வாரங்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னணியை ஆராய்ந்தபோது, அதற்கு காரணம் மனித செயல்பாடுகள் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை கிழக்கு பிரான்சில் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

பின்னர், அந்த பகுதிக்கு அருகில் புவி வெப்ப ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடந்துவருவதுதான் அந்த நிலநடுக்கங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Strasbourg என்ற இடத்துக்கு அருகில், Fonroche company என்ற நிறுவனம் புவி வெப்ப ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக அந்த பகுதியில் பூமிக்குள் ஐந்து கிலோமீற்றர் ஆழத்தில் இரண்டு ஆழ்துளைக்கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

அந்த பணிகள் காரணமாகத்தான் தொடர்ந்து 11 முறை அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போது அந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.