இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க  கிளிநொச்சிக்கு விஜயம்.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க  கிளிநொச்சிக்கு விஜயம்.

சூரியசக்தி மற்றும் காற்றலை மின் உற்பத்தியை மாவட்டத்தில் மேற்கொள்ளல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சூரியமின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் திட்ட முன்மொழிவுகள் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகையில்,
நாளைய தினம் மன்னார் மாவட்டத்தில் 100 மெகாவோட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதேபோன்று கிளிநொச்சியில் இரண்டு மின்சக்தி உற்பத்தி நிலையங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலருடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்தவகையில் பூநகரி பகுதியில் குறித்ததிட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என நம்புகின்றேன். அத்தோடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் காற்றாலை மின்னுற்பத்தி மூலம் 240 மெகாவோட் மின்னுற்பத்தியும், சூரிய சக்தி ஊடாக 150 மெகாவோட் மின் உற்பத்தியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் 400 மெகாவோட் மின் அவற்றின் ஊடாக கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.மேலும் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு காணி உள்ளிட்டவற்றை பெற்று தரும் சந்தர்ப்பத்தில் மிக விரைவாக குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் அத்திட்டத்திற்கான காணி உள்ளிட்ட விடயங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் மிக விரைவாக திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.