மஹர சிறைச்சாலை வன்முறை: இடைக்கால விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவும், பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரியால் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், முழுமையான அறிக்கை ஒரு மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.