வினைத்திறன்மிக்கதாக தரப்படுத்த உற்பத்ததிறன் பயிற்சிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்ட அரச நிறுவனங்களின் சேவைகளை வினைத்திறன்மிக்கதாக தரப்படுத்த உற்பத்ததிறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது

மட்டக்களப்பிலுள்ள அரச நிறுவனங்களின் வினைத்திறன் விளைதிறனை அதிகரிப்பதற்காக அந்நிறுவனங்களில் கடமைபுரியும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான 5 நாள் கொண்ட உற்பத்தித்த்திறன் பயிற்சி நெறி மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (10) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் அனுசரனையுடன் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனினால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி நெறியானது 5 நாட்கள் கொண்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான சான்றிதழ் பயிற்சி நெறியாக நடைபெறுகின்றது. மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், கல்வி அலுவலகங்கள், இலங்கை போக்குவரத்து சபை ஆகிய நிறுவனங்களின் உதரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பயிற்சி நெறியின் உள்ளடக்கங்களாக அரச நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நுட்பங்களும், அதற்கான எண்ணக்கருக்களும் மாவட்டத்திலுள்ள சிறந்த வளவாளர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாக கணக்காளர் எஸ். புவனேஸ்வரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ். பிரணவஜோதி, ஏ. சுதர்சன், உற்பத்தித்திறன் மாவட்ட இணைப்பாளர் புவனேந்திரன் மற்றும் பிரதேச செயலக உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
10.12.2020

Leave A Reply

Your email address will not be published.