2023 மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் உரிமை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியின்படி 2023 ஆம் வருட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

2023 ஆம் வருட மகளிருக்கான உலகக்கிண்ண தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே இந்த வாய்ப்பு அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் வசமாகியுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆலோசனை கலந்துரையாடல் சூரிச் நகரில் நேற்றைய தினம் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், கொலம்பியாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டு மகளிருக்கான உலக கிண்ண தொடரை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகள் பெற்றுக்கொண்டன.

Comments are closed.