கொரோனா மூளையையும் பாதிக்கிறது – மருத்துவ ஆய்வு

கொரோனா (Covid -19) நோயின் தாக்கத்துக்கு உள்ளானவருக்கு மனநோய் மற்றும் பக்கவாதம் போன்ற மூளை தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது .
ஆய்வு சிறியது மற்றும் மருத்துவர்களின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டது, எனவே இதுபோன்ற சிக்கல்களின் வீதத்தைப் பற்றிய தெளிவான முடிவொன்றை வழங்க முடியாது. இருப்பினும், மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், மூளையில் கோவிட் -19 இன் தாக்கத்தினையும் அதற்கான சிகிக்சைகளையும் ஆராய்வதன் அவசியத்தையும், இந்த கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.

விரிவாகப் ஆராயப்ட்ட 125 பேரில் , மிகவும் பொதுவானது பக்கவாதம் ஆகும், இது 77 நோயாளிகளில் பதிவாகியுள்ளது. இவர்களில், 57 நோயாளிகளுக்கு மூளையில் இரத்த உறைவு காரணமாக ஒரு பக்கவாதம் ஏற்பட்டது, ஒன்பது நோயாளிகளுக்கு மூளை ரத்தக்கசிவு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டது, ஒரு நோயாளிக்கு மூளையின் இரத்த நாளங்களில் வீக்கத்தால் ஏற்பட்ட பக்கவாதம் இருந்தது . முன்னதாக, கோவிட் -19, சில நோயாளிகளில், நுரையீரலிலும், உடலின் பிற இடங்களிலும் கடுமையான அழற்சி மற்றும் இரத்த உறைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 39 நோயாளிகள் மன குழப்பம் அல்லது நடத்தை மாற்றங்கள் ஒரு மாற்றப்பட்ட மன நிலையை பிரதிபலிக்கும் அறிகுறிகளைக் காட்டினர், இவர்களில் ஏழு பேர் மூளையின் வீக்கத்தைக் கொண்டுள்ளனர்.. திரிபுபட்ட மன நிலையில் உள்ள 23 நோயாளிகளுக்கு மனநோய், டிமென்ஷியா போன்ற நோய்க்குறி மற்றும் மனநிலை கோளாறுகள் உள்ளிட்ட மனநல நிலைமைகள் கண்டறியப்பட்டன. பெரும்பாலான மனநல நோயறிதல்கள் புதியவை என பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நோயாளி கோவிட் -19 ஐ உருவாக்கும் முன்பு இவை கண்டறியப்படவில்லை என்பதற்கான ஏதுநிலைகளை யும் முற்றாக மறுதலிக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேற்படி ஆய்வு பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழான Lancet Psychiatryயில் வெளியாகியுள்ளது.

Comments are closed.