உள்ளூர் சிகிச்சை ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்துவதனை துரிதப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

கொவிட்-19 இற்காக கண்டுபிடிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்துவதனை துரிதப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்!
கொவிட்-19 இற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமொன்றை, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் கொவிட் இற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானியை மேலும் விஞ்ஞான ரீதியில் ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி தொடர்பான ஆராய்ச்சி பத்திரமொன்று ரஜரட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களின் தலையீட்டுடன் முன்வைக்கப்படுவதுடன், அது தொடர்பான ஆய்விற்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவ அறிவுமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல அவர்கள் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், உலகில் கொவிட்-19 தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 இற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.