ஒன்றாக உணவருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

ஒன்றாக உணவருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

அலுவலகத்தில் ஒரு குழுவாக ஒன்றாக இருந்து சாப்பிடுவதும் புகைப்பதுவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று பொலிஸ் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா கூறுகையில், பெரும்பாலான மக்கள் அலுவலகம் அல்லது பணியிடத்திற்கு செல்லும் வழியில் முகமூடி அணிந்தாலும், மதிய உணவை உட்கொள்ளும்போது அல்லது புகைபிடிக்கச் செல்லும்போது அதை அகற்றுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மக்கள் பெரிய குழுக்களாக சாப்பிடும்போது மதிய உணவைப் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது ஒரே குவளையிலிருந்து தண்ணீர் குடிக்கும்போது இது பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது,.

“இது போன்ற நிகழ்வுகளில் வைரஸ் பரவியிருப்பதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

எனவே , பண்டிகை காலங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் போது மற்றும் ஒன்றுகூடும் போது பொதுமக்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் இடங்களை விட்டு வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் பயணித்ததன் விளைவாக சில பகுதிகளில் துணைக் கொத்தணிகள்உருவாகிய சம்பவங்கள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.