யாழ். மருதனார்மடம் கொத்தணி பாதிப்பு 77 ஆக அதிகரிப்பு!

யாழ். மருதனார்மடம் கொத்தணி பாதிப்பு 77 ஆக அதிகரிப்பு!

மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் நால்வருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய உடுவிலைச் சேர்ந்த 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவருக்கே தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவராவார்.

இதனிடையே மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் தொடர்புடைய  திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 312 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மேற்கொள்ளுவதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டன. குறித்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று வெளியாகின. அவற்றில் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து

இதற்கமைய மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியால் கடந்த 8 நாட்களில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.