புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், உருமாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் நிலைமை தற்போது கைமீறி போய் விட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையே, லண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் பொது ஊடரங்கு அமலுக்கு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார். அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றார். இந்த தடை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். கூடுமானவரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். திட்டமிட்டபடி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்வதாகவும் ஜான்சன் கூறி உள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். 67 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்

Leave A Reply

Your email address will not be published.