நேபாள நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முடிவு.

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர்  கேபி சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவிற்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலை பிரதமர் சர்மா ஒலி அவசரமாக அமைச்சரவையை கூட்டினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் நேபாள நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தங்கள் முடிவை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து இடைக்கால பொதுத்தேர்தல் தேதியையும் அவர் அறிவித்தார். இதன்படி 2021 ஏப்ரல், மே மாதத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.