கிளிநொச்சி அறிவியல் நகரில் ரி- 56 ரக துப்பாக்கிகள் சிக்கின! ரவைகளும் மீட்பு.

கிளிநொச்சி அறிவியல் நகரில் ரி- 56 ரக துப்பாக்கிகள் சிக்கின! ரவைகளும் மீட்பு.

கிளிநொச்சி – அறிவியல்நகர் காட்டுப் பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி – 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப் படையினர் அவற்றை இன்று மீட்டுள்ளனர்.

இதன்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 5 மற்றும் ரவைகள் 30 மீட்கப்பட்டுள்ளன. இவை, தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்தி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.