சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஓட,ஓட வெட்டி கொலை!

கொலை கொள்ளைகளில் இடுபட்டுவந்த சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஓட…ஓட வெட்டி கொலை!

தமிழகத்தில் சினிமா பாணியில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர், நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.

இவர் மீது ஒரு கொலை, 3 கொலை முயற்சி, ரேசன் அரிசி கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி வழக்கு ஒன்றில் கிச்சிப்பாளையம் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் செல்லதுரையின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என வழக்கு தொடர்ந்த செல்லதுரை, 15 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

செல்லதுரையை அவரது இரண்டு மனைவிகளும் வெளியில் செல்லவிடாமல் தடுத்து வீட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அம்மாபேட்டையில் உள்ள தனது வழக்கறிஞரைப் பார்க்க செல்லதுரை சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அவரை பின் தொஅர்ந்து கார்களில் வந்த மர்ம கும்பல், செல்லத்துரை ஓட்டிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி, அவரை கொலை செய்ய முயன்றது.அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு செல்லத்துரை காரில் இருந்து இறங்கி தப்பி ஓட, இருப்பினும் அந்த கும்பல், அவரை விரட்டி, சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் செல்லத்துரை உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அரிசி கடத்தலால் இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது.

அரிசி கடத்தலைக் காட்டிக் கொடுத்த நண்பன் ஜான் என்பவரை செல்லத்துரை மிரட்டியதால், ஜான் அவனது கூட்டாளிகளுடன் வந்து செல்லதுரையை தீர்த்துக்கட்டியதாக கூறப்படுவதால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை தொடர்பாக 20 பேர் கொண்ட கும்பலுக்கு தனிப்படை பொலிசார் வலை விரித்த நிலையில், விக்னேஷ், ரஞ்சித்குமார், பாண்டியராஜ், சாணக்கியா, மணிகண்டன், ராஜமணிகண்டன் மற்றொரு விக்னேஷ் என 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள பொலிசார் மீதமுள்ள 13 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.