மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் : ஜேசுதாசன்

தேர்தல்கால விஞ்ஞாபனங்களில் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண அமைப்பாளர் ஜேசுதாசன் கேட்டுக்கொண்டார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், மாவட்ட மீனவர்கள் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனாவின் பின்னர் வடபகுதியில் மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் வனவள பாதுகாப்பு திணைக்களம் காணிகளை அபகரித்து மற்றும் கடற்றொழிலில் ஈடுபடும் போது அனர்த்தம் நிகழும் சந்தர்ப்பத்தில் அதற்கான மானியங்களை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறித்த ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.