எமது உறவுகளை சிறை மீட்போம் : தமிழ் அரசியல்வாதிகள் யாழில் இன்று போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை
வலியுறுத்தி யாழில் இன்று போராட்டம்

– கட்சி பேதமின்றி ஓரணியில்
அரசியல்வாதிகள் பங்கேற்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்துகொண்டனர்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிர் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.