எல்லைக்கற்கள் இடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்.

வன வள பாதுகாப்பு திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் இடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கட்பட்ட குமுழமுனை மேற்கு கிராம சேவகர் பிரிவில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் இடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(31) மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் மு.ப11.30மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வருகை தந்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை அமைத்து ஜனவரி 15ம் திகதியின் களவிஜயத்தின் பிற்பாடு முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், கிராமிய அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.