துருக்கி சரக்கு விமானம் பறவைகளோடு மோதி விபத்து.

துருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN,) போயிங் 777 வகை சரக்கு விமானம், துருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் அல்மெட்டி விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைக் கூட்டதுடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும்  உடல் பகுதியிலும் சேதமடைந்துள்ளது.

இதன்பிறகு, விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.

இதன்பின் அனுமதியை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி செய்து விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.