இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35ஆவது தலைவர் நியமிப்பு!

பிரதமரின் தலைமையில் இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35ஆவது தலைவர் நியமிப்பு!

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35ஆவது தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா அவர்களை அப்பதவிக்கு நியமிக்கும் நிகழ்வு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் (2021.01.03) இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  பங்குபற்றுதலுடன் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப வளாகத்தின் தாமரை மண்டபத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

தெற்காசியாவில் தாய், சேய் இறப்பு விகிதம் மிகக் குறைந்தளவு பதிவாவது இலங்கையிலாகும். சுகாதார அமைச்சின் அனுசரணையில் இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் இவ்விடயத்தில் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது.

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் 35ஆவது நிர்வாகத் தலைவரின் நியமனம் இடம்பெற்றது.

குறித்த சந்தர்ப்பத்தில்  பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ,  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் புரவலர் பேராசிரியர் இந்திரஜித் அமரசிங்க, முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் யூ.டீ.பீ.ரத்னசிறி, செயலாளர் விசேட வைத்திய நிபுணர் சாமிந்த மாதொட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.