யாழ் அரச ஊழியர்கள் இருவருக்கு கொரணா தொற்று.

யாழ்ப்பாணத்தில் ஐவருக்கு கொரோனா தொற்று. இருவர் அரச நிறுவன ஊழியர்கள்

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 பேருக்கு தொற்றுறுதிசெய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட இருவர் அரச நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களில் ஒருவர் மருதங்கேணி மற்றயவர் தாவடியைச் சேர்ந்தவர். அவர்கள் இருவருடன் பணியாற்றிய தெல்லிப்பழையைச் சேர்ந்தவருக்கு தொற்றுள்ளமை ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னாரிலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.