மஹிந்தவின் செயலருக்கும் கொரோனா தொற்று உறுதி.

மஹிந்தவின் செயலருக்கும்
கொரோனா தொற்று உறுதி.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் சென்றுள்ள அதேவேளை, அங்கு சபை முதல்வரின் அலுவலக ஊழியர்கள் சிலருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தத்  தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.