2000 ரூபாவுக்கு விற்கப்படும் ‘மாஸ்டர்’ டிக்கெட் !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீசாக உள்ளது. கிட்ட தட்ட இந்த படத்திற்காக 10 மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் உச்சகத்தோடு இந்த படத்தை வரவேற்க தயாராகி உள்ளனர்.

100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இது விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றாலும், ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் காட்சி பார்க்க துடிக்கும் ரசிகர்கள், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு டிக்கெட் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இடைத்தரகர் மூலமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்ற செயல்களால் இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  அரியலூர் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.