மொயின் அலிக்கே புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ்.

மொயின் அலிக்கே புதிய உருமாறிய வீரியம் கொண்ட கொரோனா.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த இங்கிலாந்து அணியின் வீரர் மொயின் அலிக்கே புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்தா ஹெராத் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்

கடந்த 3 ஆம் திகதி இங்கிலாந்து அணி இலங்கை வந்தது. இவர்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர். 4ஆம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் முன்னர் அறிவித்திருந்தனர்

இந்நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் வைரஸ் பிரிவுடன் ஒத்ததான, வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (ஜனவரி 13) ஊடகங்களிடம் தெரிவித்தது.

இதையடுத்து, மொயின் அலி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் “B117” என்ற வகையை சேர்ந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து புதிய வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார். “எனவே, மக்கள் பீதியடைய வேண்டிய அவசியமில்லை, வழக்கம் போல் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்,” என்று சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்தா ஹெராத் தெரிவித்துள்ளார்

இலங்கை- இலங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (14) நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.