மாற்றுத்திறனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு.

மாற்றுத்திறனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு.

மாற்றுத்திறனாளிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களிளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் முகமாக மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் அனிச்சயன்குளம் கிராம சேவகர் அலுவலகத்தில் இன்று(19) மு.ப10.00மணிக்கு செயலமர்வுடனான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதனூடாக அவர்களை சுய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்கில் குறித்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வாதார நடவடிக்கைகளின் தற்போதைய நிலை, எதிர்கால மேம்படுத்தல் விடங்கள், சுயசக்தி கடன்திட்டம், குறித்த பகுதியில் சமூச சேவைகள் திணைக்களம் ஊடக அமைப்பொன்றை ஸ்தாபித்து வலுப்படுத்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன் வளவாளர்களாக மாவட்ட செயலக மற்றும் துணுக்காய் பிரதேச செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் குறித்த கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளான 25 சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.