ரஞ்சன் சபைக்கு வர முடியுமா? – மூன்று வாரங்களில் பதில் என்கிறார் சபாநாயகர்

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாகச் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா அல்லது முடியாதா என்பது தொடர்பான தீர்மானத்தை மூன்று வார காலத்துக்குள் தான் அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரவர்தன சபையில் இன்று அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே சபநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்

“ரஞ்சன் ராமநாயக்கா தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முறையான சட்ட ஆலோசனையைப் பெற்று எனது தீர்மானத்தை அறிவிப்பேன். இது தொடர்பில் எந்வொரு உறுப்பினரும் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இரண்டு வாரங்களுக்குள் அதனைக் கடிதம் மூலம் எனக்குச் சமர்ப்பியுங்கள்” என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.