வடக்குக்கு 11 ஆயிரம் தடுப்பூசிகள்; ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்.

வடக்குக்கு 11 ஆயிரம் தடுப்பூசிகள்,
ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு ஏற்றுவதற்காக 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 தடுப்பூசிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 தடுப்பூசிகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 தடுப்பூசிகளும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 தடுப்பூசிகளும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 தடுப்பூசிகளும் கோரப்பட்டன. அவை சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.