சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி ஐ.பி.எல் தொடரில் சொதப்பிய 5 ஜாம்பவான்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி ஐ.பி.எல் தொடரில் சொதப்பிய 5 ஜாம்பவான்கள்

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008-ஆம் ஆண்டிலிருந்து விளையாடப்பட்டு வருகிறது. உள்ளூரில் இருக்கும் திறமைகளையும் இந்தியாவிற்காக அடுத்த கட்ட வீரர்களை உருவாக்குவதற்கான நோக்கத்தில்தான் இது தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு சர்வதேச வீரர்கள் விளையாடினார்கள். அப்படி விளையாடினாலும் அவர்களால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அப்படி ஐபிஎல் தொடரில் கடுமையாக சொதப்பிய சர்வதேச நட்சத்திரங்கள்

1> யுவராஜ் சிங் :

இந்தியாவின் மாபெரும் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலமாகத்தான் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரையும், 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரையும் வென்றது. இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 17 வருடங்கள் விளையாடினார். அப்படியிருந்தும் ஐபிஎல் தொடரில் இவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. பஞ்சாப், புனே வாரியர்ஸ், பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 132 போட்டிகளில் 2750 ரன்கள் மட்டுமே இவரால் குவிக்க முடிந்தது. சர்வதேச அளவில் அதிரடியாக விளையாட முடிந்த இவர், ஐபிஎல் தொடரில் 129 ஸ்ட்ரைக் ரேட், 24 சராசரியுடன் மட்டுமே இத்தனை ரன்களையும் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2> ரிக்கி பொண்டிங் :

ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு உலகக் கோப்பைப் தொடர்களை வென்று கொடுத்தவர் இவர். முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக, அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் மட்டுமே ஆடி அதில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் என்பது இவரது சோகமான செய்தி.

3> மைக்கேல் கிளார்க் :

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்து ஒரு உலக கோப்பை தொடரை வென்று கொடுத்தவர் இவர். சர்வதேச அளவில் 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 98 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் என்பதை யாராலும் நம்ப முடியாது.

4> சௌரவ் கங்குலி :

முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சௌரவ் கங்குலி அதன் பின்னர் புனே வாரியர்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். 59 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 1341 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 106 சராசரி 25.

5>ஆண்ட்ரூ பிளிண்டாஃப் :

இங்கிலாந்து அணியின் மாபெரும் ஜாம்பவானாக இருந்த ஆண்ட்ரூ பிலிண்டாஃப், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மாபெரும் தொகை கொடுத்து எடுக்கப்பட்டார். 3 போட்டிகளில் மட்டுமே இவரால் விளையாட முடிந்தது மொத்தம் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.