தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்பு.

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.