காதல் என்ற பெயரால் ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள்.

தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.

தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள்.

பின்னர் அதைவிட பெட்டராக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு பெட்டரான பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இப்படி பெட்டரைத் தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.

அவர் மேலும், பெட்டர் ஆகவேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு நன்றாக வாழுங்கள்.

எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு பெட்டரான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, நல்ல ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

நீங்கள் இப்போது நல்லவளாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட நல்ல ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.