மியன்மார் தலைநகரில் இராணுவஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

மியன்மார் தலைநகரில் இராணுவஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு

மியன்மாரின் தலைநகர் யங்கூனில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இராணுவ ஆட்சியாளர்களிற்கு எதிராக அதிகரித்துவரும் சீற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் காணப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இராணுவசர்வாதிகாரம் தோல்வியடைக,ஜனநாயகம் வெற்றிபெறுக என கோசங்களை எழுப்பினர்.
கைதுசெய்யப்பட்டுள்ள தலைவர் ஆங்சான்சூசியை விடுதலை செய்யுமாறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கோசமெழுப்பினர்.

இணையத்தடைகள் சமூக ஊடக தடைகளை மீறியே இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை மியன்மாரில் ஆங்சான்சூகியின் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார ஆலோசகர் சீன் டனல் மியன்மார் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டுள்ளதை ரொய்ட்டருக்கு அனுப்பிய செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தடுத்துவைக்கப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு எதிராக ஏதோ குற்றச்hட்டை முன்வைக்கவுள்ளனர் என்னவென்பது எனக்கு தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் கைதுசெய்யப்பட்டுள்ள முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மார் அபிவிருத்தி நிருவகத்தில் பேராசிரியர் டனல் பணியாற்றி வந்தார்.
சதிப்புரட்சி இடம்பெற்றபின்னர் நிலைமைகள் குறித்து கடும் கவலைவெளியிடும் பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.