முஸ்லிம்களின் வரலாறு காணாமற் போய்க் கொண்டிருக்கும் ஒரு கால கட்டம் இது.

முஸ்லிம்களின் வரலாறு காணாமற் போய்க் கொண்டிருக்கும் ஒரு கால கட்டம் இது.

இந்த நாட்டுக்கும் தேசிய வெற்றிக்கும் நலனுக்கும் பாடுபட்ட பல முஸ்லிம் பெரியார்களின் பெயர்கள் கண்டு கொள்ளப்படாத சூழல் இன்று உருவாகியுள்ளது.

அறிஞர் சித்திலெப்பை 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தேசத்தின் நலனுக்காகப் பாடுபட்டார்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்று பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் தெரிவித்தார்.

சித்திலெப்பை நம்பிக்கையாளர் நிதிய நிறுவனம் மற்றும் மஹிய்யாவைப் பள்ளிவாசல் நிர்வாக சபையினர் அனுசரணையுடன் தேசிய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும் அறிஞர் அறிஞர் சித்திலெப்பையின் 133 வது சிரார்த்த தினம் கண்டி மஹிய்யாவை ஜாமிஉல் ஹைராத் காட்டுப் பள்ளி காட்டு பள்ளி மையவாடியில் அவரது நினைவு அறைக்கு அருகில் விசேட வைபவம் இடம்பெற்றது.

ஓராபி பா~ நிலையத்தின் பணிப்பாளர் எஸ் சலீம்தீன் , கணக்காய்வாளர் முபாரக் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரி~;மி, பள்ளிவாசல் தலைவர் கண்டி மஹிய்யாவ ஜாமிஉல் ஹைராத் காட்டுப் பள்ளித் தலைவர் இஸட். அலிக்கான், செயலாளர் கே . எம். சமீக். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துஆப் பிராத்தனையினை மௌலவி எஸ். எச் இத்திரீ;ஸ் நிகழ்த்தினார்.

பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய பேராசிரியர் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தனது முஸ்லிம் நேசன் பத்திரிகையில் பத்திரிகையில் ஆங்கில ஆட்சியாளரை விமர்சித்தார். ஊழல்களை அம்பலப்படுத்தினார். அப்போதிருந்த சட்ட சபையில் முஸ்லிம்கள் மற்றும் சுதேசிகளின் அங்கத்துவம் அதிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

தேசிய தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் அறிஞர் எம். சி. சித்திலெப்பையை சுதந்திர தினத்தில் நினைவு கூறப்படும் ஒன்று கூடலை இன்று நாம் கண்டி காட்டுப்பள்ளியின் முன்றலில் நடத்துகின்றோம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும்.
சித்திலெப்பை காலமாகி 133 வது சிராhத்த தினத்தில் பெப்பரவரி 05 இல் இதை நாம் நடத்துகின்றோம்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக அடையாளமின்றித் தூர்ந்து கிடந்த அவரது அடக்கம் செய்யப்பட்ட இடத்தினை ஒழுங்கமைத்து அதற்கு அவர் பேரில் துஆப் பிரார்த்தனை செய்து இந்த இந்த நிகழ்வு இன்று ஆரம்பமானது என்பது ஒரு வராற்றுமிக்க நிகழ்வாகும்.
தனது முஸ்லிம் நேசன் பத்திரிகையில் ஆங்கில ஆட்சியாளரை விமர்சித்தார். ஊழல்களை அம்பலப்படுத்தினார். அப்போதிருந்த சட்ட சபையில் முஸ்லிம்கள் மற்றும் சுதேசிகளின் அங்கவத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

1880 களில் இலங்கையின் விடிவுக்காக குரல்கொடுத்த முன்னோடி நாட்டுப்பற்றாளர் சித்திலெப்பை இலங்கை அரசியலில் முஸ்லிம்கள், சிறுபான்மை மக்கள் பற்றி அப்போதே சிந்தித்து செயலாற்றிய பெரிய தலைவர். அதனால் தான் அவரையும் அவர் தேசத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகளையும் வெளிப்படையான காட்ட வேண்டிய காலம் இது.

இன்று கண்டி மக்கள் அதன் உண்மையான ஆரம்ப நிகழ்வை கண்டி மஹிய்யாவை பள்ளயில் நடத்தி உள்ளனர்.உலகறியப் பேசப்பட வேண்டிய ஒரு பெரிய தேசப்பற்றாளரை அறிஞரை. சீர்திருத்தத்திற்காகவும் நவீன சிந்தனைகளுக்காகவும் பாடுபட்ட பெரிய தலைவரை ஒரு போதும் மக்களோ இளைஞர்களோ கைவிட மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்; இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.