மலர் டீச்சர் சாய்பல்லவியின் சல்சா

மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, மலர் டீச்சராக இளசுகளின் மனசுகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சாய்பல்லவி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருபெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், குடும்பப்பாங்கான, அதிக அளவில் கவர்ச்சி காட்டாத ரோல்களில் நடித்து பிரபலமானவர்களின் மிக முக்கியமானவர் சாய்பல்லவி.

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தாராம். பின்பு மலர் டீச்சர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.

இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் படு கவர்ச்சியான டிரஸ் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன் சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உடைத்து உள்ளது.

சாய்பல்லவியின் சல்சா நடன வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

Leave A Reply

Your email address will not be published.