அமெரிக்காவில் 9,300 அடி உயரத்தில் பனிச்சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர்களில் 4 பேர் பலி.

அமெரிக்காவில் 9,300 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர்களில் 4 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவின் உத்தா மாநிலத்தில் மில்கிரீக் பனி மலை பிரதேசத்தில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் 23 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்நிலையில், 9 ஆயிரத்து 300 அடி உயரத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர்கள் சிக்கி கொண்டனர். எனினும், 4 பேர் காயங்களுடன் தப்பி விட்டனர்.மற்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தப்பிய 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பனிச்சரிவில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா? என அறிவதற்காக தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த பகுதி மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி உத்தா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.  மீட்பு முயற்சியில் இறங்கிய முன்கள பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கொலராடோ மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.