முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம். நாமல்

முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம் என அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்சிவிப்பதற்கான மேற்பார்வை செய்வதும், அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் மிக முக்கிய பொறுப்பு முத்தையா முரளிதரனிடம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், பாடசாலை கிரிக்கட் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அடிப்படை வசதிகளை விடவும் பயிற்சிவிப்பாளர்கள் இல்லாமையே பாரிய பிரச்சினையாக உள்ளது. எனவே பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும். இதில் முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம்.

இதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிருவாகக்குழுவொன்று இம்மாதம் இறுதிக்குள் நியமிக்கப்படும். மேலும் ,நடைபெற்றுக்கொண்டுள்ள சகல உரிமைத்துவ லீக் போட்டிகள் குறித்த முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் மேற்பார்வை குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கரப்பந்தாட்டம், கபடி, கூடைப்பந்து போன்ற போட்டிகளையும் எல்.பி.எல் போட்டிகளை போன்று நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.