லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு.

லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாகப் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகப் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். குறித்த நில அதிர்வு 01 க்கும் குறைவாகவே ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசா ரணைகளை மேற்கொள்ளக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.