சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

டாக்டர், அயலான் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக காத்திருக்கும் திரைப்படம் டான்.

இயக்குனர் அட்லீயிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த சிபி சக்ரவத்தி என்பவரை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யா, பிரியா அருள் மோகன் பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி தற்போது இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் காலி வெங்கட், பாலா சரவணன், ஆர்.ஜெ.விஜய் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அந்த புகைப்படங்களை எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.