கொரானாவால் பாதிக்கப்பட்ட சூர்யாவின் நிலைமை என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற முன்னணி நடிகர்களை விட அதிகம் பிஸியாக இருந்த நடிகர் சூர்யா தான். படப்பிடிப்பு, புதிய படங்கள் தயாரிப்பு என பலரையும் தொடர்ந்து சந்தித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்திலும் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு கொரானா ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால் தன்னுடன் பழகிய நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கொரானா டெஸ்ட் எடுக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறாராம் சூர்யா. இந்நிலையில் சூர்யாவின் உடல் நலம் பற்றி சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சூர்யா மீண்டும் உடல் நலம் சரியாகி வீட்டிற்கு வந்து விட்டதாகவும், மேற்கொண்டு சில நாட்கள் சூர்யா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் கூறியதாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனால் சூர்யா பற்றி கவலையில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். மேலும் விரைவில் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.