இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி மரணம் அடைந்தவர்கள் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.