2036 ஆம் ஆண்டுவரை (83 வயது வரை) ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புட்டின்

ரஷ்யாவின் நிரந்தர பிரதமராகும் வாய்ப்பை விளாடிமிர் புட்டின் சட்ட ரீதியாக தன்வசமாக்கிக்கொண்டுள்ளார்.

தற்போது 67 வயதான விளாடிமிர் புட்டின் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்றார்.

அன்று முதல் ரஷ்யாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புட்டின் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.

இதற்கிடையில், ரஷ்யாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியாததனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விளாடிமிர் புட்டின் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

இந்த தடையை நீக்கும் விதமாக பிரதமர் தேர்தலில் போட்டுயிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்கும் விதமாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த சட்டமூலம் தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்ய பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் நடைமுறையில் நடைபெற்றது. மக்கள் தங்களது கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர்.

இந்த தேர்தலில் 65 சதவீத மக்கள் வாக்களித்ததாக ரஷ்ய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 77 சதவீத வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு தெரிவித்துள்ள அதேவளை 23 சதவீத மக்கள் சட்டத்திருத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளதாக ரஷ்ய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் ரஷ்ய பிரதமர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிலவி வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதுடன், ஏற்கனவே தொடர்ந்து 2 முறை நாட்டின் பிரதமராக இருந்த நபர் மேலும் இரண்டு பிரதமர் தேர்தல்களில் பங்கேற்ககூடியவாறு திருத்தி அமைக்கப்படும்.

இதனடிப்படையில் தற்போது ரஷ்ய பிரதமராக உள்ள புட்டின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரண்டு பிரதமர் தேர்தல்களிலும் அவர் பங்கேற்கலாம்.

அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036 ஆம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யாவின் பிரதமராக விளாடிமிர் புட்டின் செயல்படுவதில் இனி எந்த சட்ட சிக்கலும் இனி இல்லை எனலாம்.

இதேவேளை விளாடிமிர் புட்டின் தனது வாழ்நாள் முழுவதும் பிரதமராக இருக்கக்கூடியவாறான அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்து வருவதாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.