மக்களின் தோட்டங்களுக்குள் புகுந்த நான்கு காட்டு யானைகளால் பெரும் இழப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் மக்களின் தோட்டங்களுக்குள் புகுந்துகொண்ட நான்கு யானைகளால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளார்கள்.

கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து நான்கு காட்டுயானைகள் 50ற்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகளை அழித்துள்ளதுடன் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

விவசாய நிலங்களின் வேலி தூண்கள் பல யானையால் உடைத்தெறியப்ப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினை யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

யானையின் தாக்குதலில் உழவு இயந்திரத்தின் முன் சில் ஒன்று உடைக்கப்டப்டுள்ளதுடன் இயந்திர பாதுகாப்பு பெட்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் இரண்டு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா வரை சேதம் ஏற்படும் என உழவு இயந்திர உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தேவிபுரம் பகுதியில் தென்னை வளர்ப்பு நிலக்கடலை செய்கை,நெல்,பூசணி,வாளை போன்ற விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இவ்வாறு விவசாய கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை வாழ்வாதார பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2.00 மணி வரை குறித்த யானையினை கிராமத்தில் இருந்து விரட்டும் நடவடிக்கையில் 80ற்கு மேற்பட்ட கிராம இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.