தினமும் மாலை வேளைகளில் யானை கூட்டம் ஒன்று ஆக்கிரமிப்பு. மக்கள் அச்சம்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை தினமும் மாலை யானை கூட்டம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

திடிரென சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் சொறிக்கல்முனை வீரமுனை பகுதியின் ஊடாக செல்லும் வீதியின் ஒரு மருங்கில் குறித்த யானைகள் உலா வருகின்றன.

இவ்யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்துள்ளன.

தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.