விஜய் நடிக்கும் தளபதி 65 படத்திற்கு 3 ½ கோடி சம்பளம் பேசிய இளம் நடிகை..

 

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது உள்ளது. ஆனால் அறிவிப்பு வந்ததற்கு பிறகு தற்போது வரை தளபதி 65 படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.

இதனால் அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வைத்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தளபதி 65 படத்தின் நாயகி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி 65. தளபதி 65 படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற பேச்சுக்கள் தற்போது இணையதளங்களில் அதிகமாக உள்ளன. ஒரு சிலர் தளபதி 65 படம் சர்கார் படம் போல அரசியல் கதை என்கிறார்கள்.

வேறு சிலர் முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சர் என்கிறார்கள். ஆக மொத்தத்தில் தளபதி 65 படத்தை பற்றிய செய்திகள் தினமும் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் ஹீரோயின் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே கிட்டத்தட்ட மூன்றரை கோடி சம்பளம் பேசி ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழில் தோல்வி படம் கொடுத்திருந்தாலும் தெலுங்கில் மார்க்கெட் உள்ளதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டதை கொடுத்து ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. தமிழில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு ராசி விஜய் படத்திற்கும் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.