6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து கிரன் பொல்லார்ட் சாதனை.

6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து கிரன் பொல்லார்ட் சாதனை.

6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் அடித்து வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிரன் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணி வெஸ்ட் இண்டிஸ் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக பதும் நிஷன்க்கா 39 ரன்கள், நிரோஷன் டிக்வெல்லா 33 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டிஸ் அணியில், அதிகபட்சமாக ஒபேட் மேகாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியவெஸ்ட் இண்டிஸ் அணியின் தொடக்க வீரரான லிண்டன் சிம்மன்ஸ் 26 ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இவின் லிவிஸ் 28 ரன்களிலும், அதைத் தொடர்ந்து களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்டு சாதனை படைத்தார். அதன் பின் களம் இறங்கிய கிரன் பொல்லார்ட் ஜேஷன் ஹோல்டருடன் இணைந்து ரன்களை குவிக்கத் தொடங்கினார்.

மீண்டும் 6வது ஓவரை அகிலா தனஞ்சயா வீசினார். அப்போது களத்தில் இருந்த பொல்லார்ட் 6 பந்துகளையும் ஆறு சிக்ஸர்களாக அடித்து சாதனை படைத்தார். இறுதியில் 13.1 ஓவரில் 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பொல்லார்ட் தட்டிச்சென்றார்.

ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர் அடித்ததன் மூலம், தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் வரிசையில் தற்போது கிரன் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் ஒரே பவுலருக்கு எதிராக இந்த சாதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.