ஏஞ்சல் படுகொலையுடன் மியான்மார் இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைகின்றன!

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பொது ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த ஏப்ரல் 4 ம் தேதி 19 வயது மாணவி, இராணுவத்தினரின் சினைப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கியான் சில் என்ற இந்த பெண்ணை ஏஞ்சல் என்று அழைக்கிறார்கள்.

தலையின் பின்புறத்தில் ஊடுருவி காயம் மற்றும் மூளையில் 1.2 செ.மீ வரை துளைத்த காயம் காவல்துறையினர் பயன்படுத்தும் தோட்டாக்களிலிருந்து வேறுபட்ட ஈயத்தின் 0.7 ஒரு பகுதியை கண்டுபிடித்ததாக பிரேத பரிசோதனைக்கு பின்னர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தங்கள் நாட்டில் நடப்பவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என நாட்டு மக்கள் தெரிவிகிறார்கள்.

கியால் சிங் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கியால் சிங்கின் முகம் பாதுகாப்புப் படையினரை நோக்கியதாக இருந்துள்ளது என்பதை படங்கள் காட்டுகின்றன.

அவர் மாண்டலே பள்ளி மாணவியாக மட்டுமல்ல தைகுவான்டோ பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.

தொடர் மோதல்களில் இதுவரை 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மாரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுவின் உத்தரவுகளை ஏற்க விரும்பாத பல காவல்துறை அதிகாரிகள் அண்டை இந்திய எல்லைக்கு தப்பிச் செல்வதாக தெரியவருகிறது.

இதுபோன்று மியன்மாரை விட்டு வெளியேறிய எட்டு அதிகாரிகளை ஒப்படைக்குமாறு மியான்மார் அரசு இந்திய நகரமான மிசோரமுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அவர்களை போல பல குடும்பங்கள் மியான்மாரை விட்டு வெளியேறி இந்திய எல்லைக்கு அருகே காத்திருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.