சஜித்தினால் மட்டு. மாவட்ட காரியாலயம் திறக்கப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் நேற்று (04) பிரதம வேட்பாளரும் ஐமச தலைவருமான சஜித் பிரேமதாசவினால் திறக்கப்பட்டது.

வடக்கில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை தொடர்ந்து பிரேமதாச கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்ததுடன் நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன் பின்னரே அவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

Comments are closed.