ஏழு வருடத்தில் 100 படம் நடித்த ஒரே நடிகர் : எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்த நடிகரும் இவரே

இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதே பெரிய சவாலாக இருக்கும் நிலையில் ஏழு வருடத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

அந்த காலத்தில் பெரும்பாலும் இப்போது படம் தயாரிப்பதுபோல் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக இருந்தது இல்லை. சரியாக திட்டமிட்டு வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டு விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு படமும் நீண்ட நாட்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு முன்புவரை ஒரு நடிகர் வருடத்திற்கு குறைந்தது நான்கைந்து படங்களிலாவது நடித்து விடுவார்கள். அந்த வகையில் 7 வருடத்தில் 100 படங்களில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியவர்தான் நடிகர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் இரவும் பகலும் மேலும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஏழு வருடங்களில் 100 படங்களில் நடித்துக் கொடுத்தாராம் ஜெய்சங்கர். இதுவே அன்றைய கால நடிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் ஜெய்சங்கர் மீது நீண்ட நாட்களாக நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் ஜெயலலிதா விஷயத்திலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.