ஐ.நா. பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்! – சுமந்திரன் எம்.பி. நம்பிக்கை.

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று நாம் வெகுவாக நம்புகின்றோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வாக்களிப்பதும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் இந்தியாவின் தீர்மானமாக இருந்தாலும், தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தெரிவித்துள்ளதால், எமது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா கடந்த 2009, 2012, 2013ஆம் ஆண்டுகளில் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மட்டும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இம்முறை இந்தியா, பிரேரணைக்கு எதிராக வாக்களிக்காது என்று நாம் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.