பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் 11 நிபந்தனைகளின் கீழ் ஆரம்பம்

நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு 11 நிபந்தனைகளின் கீழ் நேற்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார பரிந்துரைகளை உள்ளடக்கி இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளிலுள்ள மாணவர் ஒருவருக்கு ஒரு அறை கொடுக்கப்படவுள்ள அதேவேளை பரீட்சை செயற்பாட்டு அறை, ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் செயற்பாடுகளில் ஒரு மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரைகள் மற்றும் செயற்பாட்டு வகுப்புக்கள் ஆகியவற்றுக்கு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், பரீட்சைகளுக்கு முன்னர் இடம்பெறும் கல்வி நடவடிக்கைகள் நான்கு வாரங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதியாண்டு மருத்துவ துறை மாணவர்கள் பயிற்சியை தொடர்வதுடன் கல்வி மற்றும் பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் விளையாட்டு மற்றும் இதர நடவடிக்கைகள் உள்ளிட்ட ஒன்றுகூடல்களுக்கு மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க வேண்டிய மாணவர்கள் தொடர்பான தீர்மானத்தை உபவேந்தர்கள் தீர்மானிக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments are closed.