யாழ். மேயர் மணிவண்ணனுக்குக் கொரோனா!

யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மூலம் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, யாழ். மேயர் மணிவண்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20ஆம் திகதி நெல்லியடியில் கலந்துகொண்டமையால் நான் என்னை உடனடியாக சுயதனிமைபடுத்திக்கொண்டதோடு பி.சி.ஆர். பரிசோதனையும் செய்துகொண்டேன். இதன்போது எனக்கு கொரோனாத் தொற்று உறுதியானது.

என்னோடு இக்காலப் பகுதியில் தொடர்புகொண்ட நபர்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்கின்றேன்.

இன்று மாலை நடைபெறவிருந்த யாழ். மாநகர சபையின் விசேட கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.