சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பல் வழமையான பாதைக்கு திரும்பியது

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீண்டும் வழமையான பாதைக்கு திருப்பி பயணிக்க வழி செய்துள்ளனர்.

சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயின் குறுக்கே கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் நிறுவனத்தின் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி மாட்டிக் கொண்டது.

இதனால் உலகளவில் சரக்குப் போக்குவரத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது மற்றும் உலகளாவிய வர்த்தகம் இழப்புகளுக்கு ஆளானது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

கப்பலை விடுவிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த மீட்புக்குழுவினர் திங்கட்கிழமை எவர் கிவன் கப்பலை மீண்டும் மிதக்கவைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.